#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சண்டைகளும் ,சர்ச்சைகளும் அதிக அளவில் வன்மமும் கொட்டி கிடக்கிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டுதான் வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் மிட் வீக் எவிக்ஷனில் அனன்யாவும், இவரை தொடர்ந்து வார இறுதியில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
#image_title
நிக்சன், கூல் சுரேஷ் இருவருமே குறைவான வாக்குகளை பெற்று கடைசி இரண்டு இடங்களில் இருந்த நிலையில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில வாரங்களாகவே இவர் வீட்டிற்கு போக வேண்டும் எனவும் கூறி வந்ததாலும், விளையாட்டில் ஈடுபாடு இல்லாமல் உட்கார்ந்திருந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
#image_title
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு ரூ. 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்கூல் சுரேஷ் முதலில் தனது நண்பருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவை சந்திப்பர் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் சந்தானத்தை சந்தித்திருந்தார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு போட்டியாளர்களும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அந்த பேட்டியில் கேட்கப்படும் முக்கியமான கேள்வி பிரதீப் ரெட் கார்டு விவகாரம் தான். இதே கேள்வி கூல் சுரேஷிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘பிரதீப் கண்டிப்பா வீட்டுக்குள்ள இருந்திருந்தா டைட்டில் ஜெயிச்சிருப்பான். பிரதீப் ரெட் கார்டுக்கு அஞ்சு பேர் செஞ்ச கிரிமினல் வேலை தான் காரணம். விளையாட்டின் மீது அவ்வளவு ஆர்வமாக இருந்தார் .எவ்வளவு திறமைகள் இருந்தாலும் தலையெழுத்து பிரகாரம் தான் எல்லாமே நடக்கும். மேலும் அர்ச்சனாவின் அப்பா தன்னை குறித்து பேசியதற்கு அவர் இந்த பேட்டியில் நன்றியும் கூறினார். ‘ . இதுகுறித்து அவர் கூறிய சுவாரசிய தகவல்கள் அடங்கிய வீடியோ இதோ..
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…