Connect with us

Tamizhanmedia.net

‘சிம்பிளா தாங்க ரெடியாகுறேன்’… மேக்கப் வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி மோனிஷா… அழகியே என வர்ணித்து உருகும் ரசிகர்கள்…

CINEMA

‘சிம்பிளா தாங்க ரெடியாகுறேன்’… மேக்கப் வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி மோனிஷா… அழகியே என வர்ணித்து உருகும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் எத்தனையோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களுக்கு மேல் கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது இந்நிகழ்ச்சி டாப்ரேட்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து இவ்வளவு சூப்பர் ஹிட் ஆக கொடுக்க முடியும் என்பதை விஜய் தொலைக்காட்சி தற்போது நிரூபித்து வருகிறது.

தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் மோனிஷாவும் ஒருவர். இவர் kpy நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர். தற்போது  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கோமாளியாக கலக்கி வருகிறார்.

மணிமேகலைக்கு பின்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக வளம் வந்து கொண்டுள்ளார் மோனிஷா. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மோனிஷா. இவர் தற்பொழுது காரில் சென்றபடி தான் மேக்கப் போடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘அழகியே’ என்று வர்ணித்து உருகி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top