தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பட படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவிற்கு வசூலை குவித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு டாப் நடிகர்களின் படங்கள் அதிகமாக முதல் ஆறு மாதங்களில் வெளிவராததால் தமிழ் சினிமா வசூலில் பின்னடைவை சந்தித்திருந்தது.
இந்த பரிதாப நிலையில் இருந்து சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படம் தமிழ் சினிமாவை மீண்டும் புத்துணர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது அரண்மனை 4 திரைப்படம் வசூலில் 100 கோடியை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து சூரி ,விஜய் சேதுபதி போன்றோர் நடித்த படங்கள் வெளியாகிய நிலையில் அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியை அளித்து தமிழ் சினிமாவை மீண்டும் மீட்டெடுத்தது.
மேலும் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரூபாய் 109 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் லைப் டைம் வசூல் சாதனை பெற்ற நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் தனுஷ் இயக்கி நடித்துள்ள நாற்பத்தி ஒன்பதாவது திரைப்படம் ஆன ராயன் வெளியானது.
இந்தப் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர் .மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடல் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்களைக் கடந்து திரையறுங்குகளில் வெற்றி நடை போடும் திரைப்படமாகவும் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த ராயன் படம் ரூபாய் 114 கோடியை 9 நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள சங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட சுமார் ரூபாய் 140 கோடியை தமிழ் சினிமாவிற்கு வசூல் செய்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…