தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நிலையில் திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சில நாட்களாகவே ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதால் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், க்ரிஷ் சோடங்கர், விஜய் வசந்த் ஆகியோர் அடுத்தடுத்து விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளது இதனை உறுதிப்படுத்துகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகன் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பாலானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வர…
பராசக்தி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜனநாயகன்…
கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக ஐந்து வயது சிறுமிக்கு பிறப்புறுப்பில் அவருடைய சித்தி சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி…
தமிழக அரசியலில் நிலவிவரும் கூட்டணி கணக்குகளில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது…
பாஜக எம் பி யும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான ஜோதிராதித்யா இந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக…