திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்?… டெல்லியில் ராகுல் போட்ட ‘ஸ்கெட்ச்’.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாகத் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், எதிர்வரும் தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகளைக் கோரி வருகிறது. ஆனால், திமுக தலைமை இதற்கு உடன்படாத சூழலில், இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற விவாதத்தை அரசியல் வட்டாரங்களில் கிளப்பியுள்ளன.

இந்தச் சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ராகுல் காந்தி சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதும், காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் தவெக-வுடன் கைகோர்க்க ஆர்வம் காட்டி வருவதும் இந்தக் கணிப்புகளுக்கு வலுசேர்க்கின்றன. ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் காங்கிரஸின் ஆதரவு மற்றும் புதிய அரசியல் சக்திகளுடன் இணைவதன் மூலம் கட்சியை மீண்டும் வலுப்படுத்தலாம் என்ற பிரவீன் சக்கரவர்த்தி போன்றோரின் கருத்துகளும் தவெக-காங்கிரஸ் கூட்டணியை நோக்கிய நகர்வுகளாகப் பார்க்கப்படுகின்றன.

டெல்லி இந்திரா பவனில் இன்று நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதா அல்லது அதிகாரப் பகிர்வுக்கு வாய்ப்புள்ள புதிய அணியைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளதால், இதன் முடிவுகளைத் திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்புமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 மணத்தியாலங்கள் ago