குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெகதீப் தன்கரை கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாஜக அறிவித்து, 2025 வரை துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். மேலும் 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். 1990 – 1991 வரை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும் 1993 மற்றும் 1998 க்கு இடையில் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், “நேற்று பகல் 12:30 மணிக்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. அதில் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜுஜூ உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். மீண்டும் மாலை 4:30 மணிக்கு கூட்டம் கூடிய பொது நட்டா ரஜிஜு அதில் பங்கேற்கவில்லை. அது குறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர் இன்று பகல் ஒரு மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார். நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 4:30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத தன்கர் பதவியை செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…