ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது அக்கட்சிக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த காங்கிரஸ் நிர்வாகி ஜாபர் சாதிக், தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை தன்னை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்றும், டெல்லி மேலிடம் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு வேட்பாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜாபர் சாதிக்கின் இந்த திடீர் முடிவு மற்றும் குற்றச்சாட்டுகள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…