தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது. 1967-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத காங்கிரஸ், இந்த முறை எப்படியாவது “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற இலக்கை அடையத் துடிக்கிறது. நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்தாலும், அமைச்சரவையில் இடம் கிடைக்காத அதிருப்தி ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு வாக்குறுதி காங்கிரஸ் தலைமைக்கு ஒரு புதிய வாய்ப்பாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் தொடர்வது பாதுகாப்பானது என்று ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் கருதினாலும், ஒரு தரப்பினர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும், அதன்மூலம் கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்தலாம் என்றும் நம்புகின்றனர். குறிப்பாக, திமுக வழங்கும் குறைந்த அளவிலான தொகுதிகளை விட, தவெகவுடன் இணைந்தால் சுமார் 75 தொகுதிகள் வரை பெற முடியும் என்பது இவர்களின் கணக்காக உள்ளது. மேலும், கேரள காங்கிரஸ் தலைவர்களும் விஜய்க்கு அண்டை மாநிலத்தில் உள்ள செல்வாக்கைக் கருதி, இந்த புதிய கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த முடிவில் உள்ள அரசியல் ஆபத்துகளையும் காங்கிரஸ் உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டபோது வாக்கு வங்கி சரிந்த கசப்பான அனுபவங்கள் இருப்பதால், வலுவான திமுக கூட்டணியை உதறிவிட்டு புதிய கட்சியான தவெகவை நம்புவது “அரசனை நம்பி புருஷனை கைவிடும்” கதையாகிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ராகுல் காந்தியின் முடிவு இதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், தமிழக காங்கிரஸ் தலைமை தற்போது ஒரு குழப்பமான மற்றும் தீவிரமான அரசியல் சதுரங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…