தமிழக அரசியலில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியல் சூழலை மாற்றி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் நிலை உருவான போது, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதில் பெரும்பாலான கட்சிகள் தவெக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இந்தச் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட கடுமையான உட்கட்சி மோதலின் காரணமாக, அக்கட்சியின் 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து, எஞ்சிய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
திடீரென வந்த இடைத்தேர்தலால் களமிறங்கியுள்ள அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதில் முதல்கட்டமாக திமுக 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதிமுகவும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. ஆளுங்கட்சியான தவெகவும் விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக போன்ற முக்கிய தோழமைக் கட்சிகள் தவெக வேட்பாளர்களுக்கு முழு ஆதரவை உறுதி செய்துள்ளன. இருப்பினும், வெளிப்படையான கூட்டணி வைக்காமல் வெளிவாரி ஆதரவு மட்டும் வழங்கி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்காமல், பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்ற முடிவை அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை ‘குதிரை பேரம்’ என கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடுமையாக விமர்சித்ததே இதற்குக் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க முடியாது என்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியாக இருப்பதால், இந்த இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிக்கப் போவதில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…