இயக்குநர் பாரதிராஜாவிடம் கடலோர கவிதைகள், முதல் மரியாதை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் இளவரசு. பிறகு பாஞ்சாலங்குறிச்சி படத்தில், மகாநதி சங்கருக்கு பின்னணி குரலாக ஒலித்திருப்பார். பிறகு காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். முத்துக்கு முத்தாக, லிங்கா, களவாணி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் என பல படங்களில் இளவரசு நடிப்பு பிரமாதமாக இருந்தது.
இவர் ஒரு குணசித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் இவரை நம்மில் பல பேருக்கு தெரியும். மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமாவில் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வந்தவர். அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஒளிப்பதிவாளர்பி கண்ணனிடம் உதவியாளராக பணியாற்றினார். பின் நாட்களில் பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது பணியை தொடங்கியவர். விஜயின் நினைத்தேன் வந்தாய் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு விருதையும் பெற்றவர். ஒரு காலத்தில் ஒளிபதிவே வேண்டாம் என்று சினிமாவில் நடிக்க தொடங்கினார். வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவசி போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் வடிவேலு நடித்த 23ம் புலிகேசி திரைப்படத்தில் மங்குனி பாண்டியன் இந்த கதாபாத்திரம் இவரை சினிமாவில் ஒரு காமெடி நடிகராக உயர்த்தியது.
அதன் பின் நாட்களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வளம் வரும் இளவரசு சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், 1967ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி எம்எல்ஏ மலைச்சாமி மகன் என்பதை நான் யாரிடத்திலும் தெரிவித்ததில்லை. என்னுடைய சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்திருப்பதாக பெருமையோடு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…