தமிழ் சினிமாவில் பல வருடங்களாக துணை கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர் தான் பிளாக் பாண்டி. சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாவை பொருத்தவரை இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படத்திலும் சிறப்பான பெயரை பெற்றார்.
இப்படி நல்ல நடிகர் என்று அடையாளம் இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்படி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாகேஸ்வரி மற்றும் ஆட்டோகிராப் என வரிசையாக இவர் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு துணை கதாபத்திரங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியான ரோல்கள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.
இறுதியாக விஜயின் கோட் திரைப்படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிளாக் பாண்டி சமீபத்தில் அளித்த பேட்டியில், வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும். அப்போ நான் ரொம்ப சின்ன பையனா இருந்ததால் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எனக்கு பதிலா அந்த ரோலில் நடிக்க நான் தான் ஒரு பையனை கூட்டிட்டு போய் விட்டேன். அதன் பிறகு நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் நடிப்பதற்கு கூட வெங்கட் பிரபு சார் கிட்ட நான் ரொம்ப சண்டை போட்டேன்.
தெரிஞ்சு நீங்களே எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் வேறு யாரு எங்களுக்கு வாய்ப்பு தருவாங்க என்று சண்டை போட்டதுக்கு அப்புறம் சரி வா நடி என்று கூப்பிட்டு நடிக்க வச்சாரு. அதுலயும் ஒரே ஒரு சீன் தான் நான் நடிச்ச காட்சிகள் வந்தது. சென்சாரில் சில காட்சிகளை தூக்கிட்டாங்க. அதுக்காக நான் அவர்கிட்ட போய் சண்டை போட முடியாது. நான் நடிக்கிறேன் என்று சொன்ன சரி வா நடின்னு அவரும் கூப்பிட்ட நடிக்க வச்சாரு அவ்வளவுதான். ரஜினியின் பாபா படத்தில் கூட சின்ன வயசு ரஜினியாக நான் தான் நடிச்சேன். ஆனா சென்சாரில் தூக்கிட்டாங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று பிளாக் பாண்டி பேசியுள்ளார்.
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…