Categories: சினிமா

‘நா சொல்லி தான் அஜித்துக்கு வாய்ப்பே கெடச்சுது.. கடைசில எனக்கே கைய விரிச்சிட்டாரு’.. போண்டாமணி உருக்கம்..

Spread the love

போலீஸ் வந்து கேப்பாக, அடிச்சுக் கூட கேப்பாக, அப்பக்கூட சொல்லிராதீக – என கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவிடம் சொல்லிவிட்டு ஓடும் அந்த காமெடி நடிகர்தான் போண்டாமணி. பல படங்களில் காமெடி நடிப்பில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக வடிவேலுவுடன் நடிக்கும் காமெடி நடிகர் கூட்டணியில் இவர் நிச்சயம் இருப்பார். விவேக்குடனும் சில காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன் இவர் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துணை நடிகரான, காமெடி நடிகரான இவருக்கு சிலர் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்தனர். அதில் தனுஷ், விஜய்சேதுபதி மற்றும் கோவை தொழிலதிபர்கள் அதிகமாக உதவி இருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் காமெடி நடிகர் போண்டாமணி அஜீத்குமார் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அஜீத்குமார் நடிக்க வந்த புதிதில் மைனர் மாப்பிள்ளை என்ற படம், ரஞ்சித் நடித்திருந்தார். இதில் இன்னொரு நடிகர் நடித்தால் நன்றாக இருக்குமே என படத்தின் தயாரிப்பாளர் கோணார் ஆசைப்பட்டார். அப்போது, கோணாருக்கு நான்தான் செல்லப்பிள்ளை. நான் சொன்னால் அவர் கேட்டுக்கொள்வார். அப்போது, கண்ணதாசன் என்ற மேனேஜரை பார்க்க அஜீத்குமார் அங்கு வந்து சென்றார். அப்போது மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜீத்குமாரை நடிக்க வைக்கலாமே, என்று கோணாரிடம் சொன்னேன். அவரும் அதை ஏற்று அந்த படத்தில் நடிக்க வைத்தார்.

ஒரு கட்டத்தில், அஜீத்குமார் வளர்ந்துவரும் நடிகராக மாறிய நிலையில், அவரிடம் சென்று பேசிய போது, நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன். அதனால் உங்களுக்கு என் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தருகிறேன் என்றார். நான் பட வாய்ப்புக்காக வரவில்லை. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என நலம் விசாரிக்கவே வந்தேன் என கூறிவிட்டு வந்தேன். அடுத்து சிட்டிசன் படப்பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த போது, அஜீத்குமாரை சந்தித்த போது, நான் சொன்னால் டைரக்டர் கேட்க மாட்டார். நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்றார்.

ஆனால், மறுநாளே அந்த டைரக்டர் சரவணன் சுப்பையா அழைத்து, அஜீத் சொல்லவில்லை, அவரது குணம் அதுதான் என்று கூறி எனக்கு அத்திப்பட்டி கிராமவாசியாக நடிக்க வாய்ப்பளித்தார். எனக்கு மருத்துவ சிகிச்சைக்கு அஜீத்குமாரின் மேனேஜரிடம் 10 தடவைக்கு மேல் பேசினேன். அவர், தகவலை அஜீத்குமாரிடம் சொல்லி உதவி செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்றார். அவர் சொன்னாரா, இல்லையா என்று கூட தெரியவில்லை. ஆனால், ஆபரேசன் தியேட்டரில் கடைசி வரை அஜீத்குமார் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வார் என காத்திருந்து ஏமாந்து போனேன், என கூறியிருக்கிறார் நடிகர் போண்டாமணி.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago