தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரிய திருப்பம் உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், சென்னைக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் அரசு விழாவில் ஒரே மேடையைப் பகிர உள்ள அதே வேளையில், அதே நாளில் சென்னை வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் “மாணவர்களின் குரல்” நிகழ்ச்சியையொட்டி இச்சந்திப்புக்குத் தமிழக காங்கிரஸ் தரப்பில் முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், அதற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வழங்கப்படவில்லை.
மாநிலத்திற்கு வரும் பிரதமரை அரசு மரபுப்படி முதல்வர் வரவேற்பது இயல்பானது என்றாலும், கூட்டணிக் கட்சியின் தேசிய தலைவரைத் தவிர்த்துவிட்டுப் பிரதமருடன் மேடையேறுவது காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பையும் மனக்கசப்பையும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தது மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களில் கூட்டணிக் தலைவர்களுடன் மேடையேறாமல் தனியாகவே பிரச்சாரம் செய்தது எனத் தவெக தொடர்ச்சியாகக் காட்டி வரும் விலகல் போக்கு, தற்போது கூட்டணிக்குள் பெரும் இடைவெளியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் தவெகவின் தெளிவான அரசியல் கணக்கு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் முதன்மையான பலமாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் வாக்காளர்களை இலக்காகக் கொண்டே ராகுல் காந்தியின் சென்னை வருகையும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் நின்றால், தனது இளைஞர் வாக்கு வங்கியைக் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்றும், இதனால் தவெகவின் தனித்துவ அடையாளம் மங்கக்கூடும் என்றும் அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும் தேசிய அளவில் எந்தக் கட்சிக்கும் கீழான அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், தவெகவின் தனித்தன்மையை நிலைநாட்டவே விஜய் விரும்புகிறார்.
ஆட்சியைத் தக்கவைக்கவும் சட்டமன்ற பலத்திற்கும் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படும் சூழலில், முதல்வரின் இந்த உதாசீனப் போக்குத் தமிழக காங்கிரஸை ஆழ்ந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கொள்கைப் பாதையில் பயணிப்பதாகக் கூறும் சூழலில், ராகுல் காந்தியைத் தவிர்த்துவிட்டுப் பிரதமர் மோடியுடன் மேடை பகிர்வது தங்களின் கோட்பாடுகளுக்கே எதிரானது எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறுகின்றனர். தேசியத் தலைவர்களின் சென்னை வருகையையொட்டி முதல்வர் விஜய் வகுத்துள்ள இந்தத் தனிப்பாதை, கூட்டணிக் கட்டுப்பாடுகளைத் தாண்டி தனது சொந்த அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 4…
கோவை மேட்ரிமோனி தளங்கள் மூலம் மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைப்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…
நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…