டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைதான சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் உரிமைகளுக்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தில், பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெருவாரியான ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராக இருக்கும் விஜய், இந்த விவகாரத்தில் நேரடியாக வாய் திறக்காமல் அமைதி காப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்திலும், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் பக்கத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகவும் ராகுல் காந்தி கைதைக் கண்டித்தும் பதிவுகள் வெளியாயின. “நீட் தேர்வே கூடாது என்பதே தவெகவின் உறுதியான நிலைப்பாடு” என்றும், தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் தனது சொந்த எக்ஸ் தளத்திலோ அல்லது தனது கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாகவோ இதுவரை எவ்விதக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலிலும், ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் விஜய் காட்டும் இந்த மௌனம் ஏற்கத்தக்கதல்ல என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் ‘ஏகநாயகனாக’ தவெகவினரால் சித்தரிக்கப்படும் அவர், அதே இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் மிக முக்கியப் பிரச்சினையில் நேரடியாக தலையிடாமல் ஒதுங்கியிருப்பது அவரது அரசியல் அணுகுமுறை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கட்சி அறிக்கை வெளியிட்டுவிட்டது என்ற காரணத்திற்காகவே அவர் அமைதியாக இருக்கிறாரா என்ற விமர்சனமும் வலுத்து வருகிறது.
அத்துடன், ராகுல் காந்தியின் கைது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் கண்டனத்தைப் பதிவு செய்யாதது காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜய் இந்த விவகாரத்தில் தனது தெளிவான நிலையை எப்போது நேரடியாகப் பகிரங்கப்படுத்துவார் என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக உருவெடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…