“ஆலோசகருக்கு அனுமதி இல்லையா?”…. அப்போ எனக்கும் வேணாம்… விஐபி கேட்டிற்கு ‘நோ’ சொன்ன முதல்வர் விஜய்…. விமான நிலையத்தில் பரப்பரப்பு….!

Spread the love

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் பிரிட்டன் நாட்டிற்குத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை நேற்று தொடங்கினார். வரும் 17-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இந்த முக்கியச் சுற்றுப்பயணத்தில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முன்னணி நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் ஆலோசகர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

லண்டன் புறப்படுவதற்காக முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. வழக்கமாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்காக ஒதுக்கப்படும் விஐபி வாயில் வழியைப் பயன்படுத்த, சிவில் விமான போக்குவரத்து பணியகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. பரிசீலனைக்குப் பிறகு முதலமைச்சருக்கு மட்டும் அந்த வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அம்சங்களைக் காரணம் காட்டி அவரது ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தன்னுடன் வரும் ஆலோசகருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்த முதலமைச்சர் விஜய், தனக்கு அளிக்கப்பட்ட விஐபி கேட் வசதியை உடனடியாகப் புறக்கணித்தார். தனது குழுவினரை விட்டுவிட்டுத் தான் மட்டும் தனி சலுகையைப் பயன்படுத்த விரும்பாத அவர், சாதாரண பயணிகளைப் போல பொது வழியிலேயே செல்வதாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் கேட் எண் டி9 வழியாக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதலமைச்சர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்ற சம்பவம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

7 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

30 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago