நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகும் தமிழக முதல்வர் விஜய் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது வேதனை அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரியலூர் அனிதா இல்லத்திற்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி, அங்கிருந்துதான் விஜய் தனது அரசியல் பயணத் தொடக்கப் புள்ளியைக் குறித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளையும் உணர்வுகளையும் மறந்துவிட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நீட்டுக்கு எதிராகப் போராட முயன்ற மாணவர்களை மெரினா கடற்கரைக்குள் நுழைய விடாமல் தடை விதித்த காவல் துறையின் நடவடிக்கையையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஏற்கனவே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது கூட எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை; அப்படியிருக்க எழும்பூரில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்துவதும், மெரினாவைச் சுற்றித் தடைகளைப் போடுவதும் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராகப் பேசியதோடு நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் நின்று மாணவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களின் போது வெறும் செய்திக் குறிப்புகளோடு முடித்துக் கொள்ளாமல், செய்தியாளர்களை நேரடியாகச் சந்தித்து முதல்வர் விஜய் தனது நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார். “முன்னாள் முதல்வர்கள் செய்ததைப் போல, காத்திருக்கும் நிருபர்களிடம் நீட்டுக்கு எதிராக உறுதியான குரலை எழுப்பியிருக்கலாம். பதவியேற்றது முதல் இதுவரை ஒருமுறை கூட அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டம் நடைபெற்ற பாலன் இல்லத்திற்கு அமைச்சர் ராஜ்மோகனை அனுப்பிய தவெக அரசின் முடிவையும் அவர் விமர்சித்தார். “ராஜ்மோகன், அருண்ராஜ், வன்னியரசு போன்ற ஒரு சில அமைச்சர்களின் உழைப்பில்தான் இந்த அரசின் பிம்பம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது; சூழல் அறியாமல் ராஜ்மோகனை அங்கு அனுப்பியதால் அவர் மாணவர்களால் கேலி செய்யப்படும் நிலை உருவானது, அதற்குப் பதிலாக முதல்வரே நேரடியாகச் சென்று பேசியிருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அமைதி காப்பதன் மூலம் பாஜகவுக்குத் துணை போகிறாரோ என்ற பிம்பம் பொதுமக்கள் மத்தியில் உருவாகி வருவதாகவும், விஜய் உடனடியாக இதில் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…