தமிழ்நாடு அரசியல் களத்தில் நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்பங்களும் திரைமறைவு நாடகங்களும் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டி வருகின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொடர் நிபந்தனைகளும், இடைத்தேர்தல் முடிவுகளும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. இதனால் கூட்டணியைச் சார்ந்துள்ள நிலையை மாற்றியமைத்து, அரசுக்குத் தனிப் பெரும்பான்மையை உறுதி செய்ய அவர் தீவிரமான முடிவெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணியை உள்வாங்கும் முயற்சியில் தவெக தலைமை இறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.க்களைப் பிரித்து, தவெக அரசுக்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் இந்த ரகசியப் பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மிகுந்த பதற்றத்துடனும் அவசரத்துடனும் இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. “பேச்சுவார்த்தை என்று நேரத்தைக் கடத்தாமல், உடனடியாக 28 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துப் பட்டியலை இறுதி செய்து களத்தில் இறங்குங்கள்” என்று வேலுமணி மற்றும் சண்முகம் தரப்புக்கு விஜய் கடுமையான அழுத்தம் கொடுத்து வருகிறார். தகவல் எதிர்தரப்பிற்கு கசிந்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களைத் தனி முகாம்களுக்கு மாற்றுவது போன்ற எதிர் நடவடிக்கைகளில் இறங்கிவிடுவார் என்று விஜய் கருதுகிறார்.
அதிமுக தலைவர்கள் சுதாரிப்பதற்கு முன்பாகவும், தற்போதைய அரசியல் நிலவரம் ஊடகங்களில் வெடிப்பதற்கு முன்பாகவும் ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே விஜய்யின் திட்டமாக உள்ளது. இதற்கிடையில், தவெகவின் இந்த அதிரடி நகர்வுகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியவந்தால் சட்டசபையில் அரசுக்கு எதிராக நெருக்கடி உருவாகலாம் என்பதால், எவருக்கும் யோசிக்க அவகாசம் தராமல் காரியத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில மணி நேரங்களாக தவெகவின் முக்கியப் பிரதிநிதிகள் வேலுமணி மற்றும் சண்முகத்துடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசி ஆதரவுத் திரட்டும் பணியை அந்த அணி தீவிரப்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏதேனும் ஒழுங்கு நடவடிக்க எடுப்பதற்குள், 28 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் சட்டசபைத் தலைவர் மற்றும் ஆளுநரைச் சந்தித்துத் தனி அணியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் வேலுமணி அணி உறுதியாக உள்ளது.
வரவிருக்கும் அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் அரங்கேறப் போகும் இந்த அரசியல் நகர்வுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சுதாரித்து தனது எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பாரா அல்லது விஜய்யின் அழுத்தத்தால் வேலுமணி அணி தவெகவிற்கு ஆதரவளித்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என்ற கேள்விக்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…