“543 இடங்கள்… 1971 கணக்கெடுப்பு”…. டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் போட்ட ‘3 மாஸ் போா்ட்’… இத யாருமே எதிர்பார்க்கலையே….!

Spread the love

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையேயான தொகுதிகளின் விகிதாச்சாரப் பகிர்வை மாற்றக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இந்திய அளவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்கள், மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயம் எழுந்துள்ள சூழலில், இந்த முக்கிய நகர்வை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1971-க்குப் பிறகான மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

ஒன்றிய அரசு அளித்த உறுதிமொழிகளின்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களில் முன்னணியில் இருக்கும் எந்தவொரு மாநிலமும் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது என்பது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும். எனவே, மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படாத வகையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்களுக்கிடையேயான தொகுதிப் பகிர்வு விகிதம் ஆகியவை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

மேலும், பெண்களுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எந்தவித காலதாமதமும் இன்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இத்தீர்மானம் கோருகிறது. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிரந்தரமாக்குவது, மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இத்தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றவுள்ளது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago