சொந்த காசை போட்டு நொந்து நூடூல்ஸான அதிகாரிகள்… இறங்கி அடிச்ச தமிழக அரசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்… பறந்தது உத்தரவு….!

Spread the love

தமிழ்நாட்டில் மிக முக்கிய பிரமுகர்களின் (VVIPs) வருகையின்போது செய்யப்படும் நெறிமுறை சார்ந்த வரவேற்பு, உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக மாவட்ட நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் நிலவிவந்த சிக்கலுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது தீர்வு கண்டுள்ளது. இதுவரை இத்தகைய செலவுகளுக்குத் தனியாக உடனடி நிதி ஒதுக்கீடு இல்லாததால், விழா ஏற்பாட்டாளர்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், மாவட்ட ஆட்சியர்களும் கள அதிகாரிகளும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டி செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அரசு விழாக்களுக்குப் பந்தல் அமைப்பாளர்கள், சிற்றுண்டி விநியோகஸ்தர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு உடனடியாகப் பணம் கொடுக்க முடியாமல், அதிகாரிகள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்கும் சூழல் நிலவியது. இது தொடர்பான வருவாய்த்துறை அதிகாரிகளின் அதங்க ஆதங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இத்தகைய நடைமுறைச் சிக்கல்களால் கட்டணப் பட்டியல்களைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டு, அரசின் வெளிப்படையான நிர்வாக நோக்கத்திற்குப் பின்னடைவு ஏற்படுவதாக உணர்ந்த அரசு, மாவட்ட ஆட்சியர்களின் கைகளில் முன்கூட்டியே நிதியை ஒப்படைக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 2026-27 ஆம் நிதியாண்டிற்காக ரூ.6.85 கோடி நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் தவிர்த்து, குடியரசுத் தலைவர், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய-மாநில உயர் அதிகாரிகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகைக்கான செலவுகளை ஈடுகட்ட இந்த நிதி பயன்படும். இதன் மூலம், விழா ஏற்பாடுகளுக்காக அதிகாரிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை குறையும் என்பதோடு, சிறு வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நேரத்தில் பணம் சென்று சேருவது உறுதி செய்யப்படும்.

மாவட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இங்கு வருகை தரும் பிரமுகர்களின் சராசரி எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு இந்த நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி உள்ளிட்ட 8 முக்கிய மாவட்டங்களுக்குத் தலா ரூ.25 லட்சமும்; திருநெல்வேலி, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்குத் தலா ரூ.20 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட எஞ்சிய 23 மாவட்டங்களுக்குத் தலா ரூ.15 லட்சம் வீதம் நிதி பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மாவட்ட நிர்வாகங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago