இருக்கிற இடத்தில் இருக்கணும்…. “காங்கிரஸை Left Hand-ல் டீல் செய்யும் விஜய்”…. காங்கிரஸின் மிரட்டலுக்கு தவெக கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

Spread the love

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விவகாரம் தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக அமைச்சர்களும் நிர்வாகிகளும் விஜய்யை அடுத்தடுத்து பிரதமர் வேட்பாளராகப் பேசி வரும் சூழலில், ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்தது கூட்டணி கட்சியான காங்கிரஸை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி தர்மத்தைக் காக்க ஒரே ஒரு அறிக்கையின் மூலம் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும் என்றாலும், காங்கிரஸ் தலைவர்களின் கொந்தளிப்பையும் மிரட்டல்களையும் துளியும் பொருட்படுத்தாமல் விஜய் அமைதி காத்து வருவது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது.

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பதோ அல்லது தன்னை பிரதமர் வேட்பாளராகப் பேசும் தவெக நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதோ என இரு வாய்ப்புகள் இருந்தும், விஜய் இதில் முழுமையான மௌனம் காத்து வருகிறார். தவெக தலைவர்கள் தன்னை தேசிய அளவில் முன்மொழிவதையும், வட மாநிலங்களில் அதற்காகத் தீவிரமடைந்து வரும் சமூக வலைதளப் பிரச்சாரங்களையும் அவர் தடுத்து நிறுத்தாமல் கள்ள மௌனம் சாதிப்பது, காங்கிரஸுக்கு அவர் கொடுக்கும் மறைமுக அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களில் கொதித்தெழுந்த பிறகும், தவெக தலைமை அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.

இந்த அலட்சியமான அணுகுமுறைக்கு பின்னால் தெளிவான அரசியல் எதார்த்தம் இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிரம்மாண்டமான திமுக கூட்டணியின் பலத்தையும் மீறி, தனித்து நின்று கணிசமான வாக்கு வங்கியுடன் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள தவெக, காங்கிரஸின் தயவாலோ அல்லது ராகுல் காந்தியின் செல்வாக்காலோ தாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்பதில் உறுதியாக உள்ளது. “தமிழகத்தில் எங்களோடு கூட்டணி வைக்கலாம்; ஆனால் தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிபந்தனைகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்” என்ற நேரடி சிக்னலை இந்த நகர்வின் மூலம் டெல்லி மேலிடத்திற்கு விஜய் மிகத் தெளிவாகக் கடத்தியுள்ளார்.

பழைய கூட்டணிக் கட்சிகளைப் போல ராகுல் காந்தியின் பின்னால் கைகட்டி நிற்காமல், தனது தேசிய பார்வையையும் வியூகத்தையும் தவெக மிகத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. பிற மாநிலங்களில் கட்சிக் கிளையைத் தொடங்குவது, ‘தேசிய வெற்றி கழகம்’ எனப் பெயர் மாற்ற திட்டமிடுவது, 100 இடங்களைக் குறிவைத்து களம் இறங்குவது என விஜய்யின் தேசிய ஆட்டம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் கோபத்தையோ, உள்ளூர் தலைவர்களின் அறிக்கைகளையோ சிறிதும் பொருட்படுத்தாமல் தனக்கான தேசிய களத்தை விஜய் திட்டமிட்டு நகர்த்தி வருவது, 2029 தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு அவர் வைத்துள்ள மிகப்பெரிய ‘செக்’ ஆகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago