வடகிழக்கு பருவமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. முதல்வர் விஜய் மாஸ் ஆக்ஷன்….!

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னையில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் மூத்த அமைச்சர்கள், சென்னை மண்டல பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. எல் நினோ ஆண்டு காரணமாக எதிர்வரும் நாட்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்புள்ளதால், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்களின் தயார்நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு பால், குடிநீர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய அவர், தொடர் மழையிலும் சிறப்பாகப் பணியாற்றி வரும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

“திமுகவும் இபிஎஸ்-ம் ஒண்ணுதான்”…. நாலு மாசத்துல செம அடி…. கூட்டணி ரகசியம் உடைந்தது…. அமைச்சர் செங்கோட்டையன் பிக்பாஸ் பஞ்ச்….. அடுத்த பரபரப்பு….!

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…

13 minutes ago

“சண்முகம் வுட்றா வண்டிய கமலாலயத்துக்கு”…. தமிழக பாஜக தலைவராகிறாரா ‘நாட்டாமை’ சரத்குமார்?…. மோடியின் அடுத்த மாஸ்டர் பிளான்…. டெல்லி கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்….!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

18 minutes ago

டாய்லெட் கிண்ணத்தில் சாப்பாடு…. மலம் போன்ற ஐஸ்கிரீம்….. தைவானின் விசித்திரமான உணவகத்தால் ஷாக்கில் உறைந்த இன்ஃப்ளுயன்சர்….!

தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…

25 minutes ago

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

31 minutes ago

“முதல்வரே…. நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?”…. அரசியல் களத்தை அதிரவிட்ட கனிமொழியின் ஆவேச பேச்சு…!

தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் கைது மற்றும் திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சு குறித்து கனிமொழி…

37 minutes ago

“நான் என்ன போதைப்பொருளா கடத்தினேன்?”…. கைதுக்குப் பின் கார்த்திகா ஆவேசம்…. 15 நாள் சிறையில் அடைப்பு….!

தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி…

44 minutes ago