தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். வடை மாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை.
இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன. இந்த நிலையில் கவிஞர் வாலி திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு மிகப் பெரிய ஓவியராக இருந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் பேட்டியில், எனக்கு இளம் வயதில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம். பல கவிஞர்களின் புகைப்படத்தை நான் வரைந்து உள்ளேன்.
காமராஜர் புகைப்படத்தை கூட நான் வரைந்து உள்ளேன். என்னுடைய வீட்டில் சுவற்றில் நிறைய ஓவியங்கள் இருக்கும். கல்கி என்னுடைய வீட்டுக்கு வந்து அதனை பார்த்து பாராட்டியுள்ளார். நான் ராஜ சவுத்ரி கிட்ட 1949 ஆம் ஆண்டு ஒரு வருடம் ஓவியக்கலை பயிற்சி பெற்றேன். கிருஷ்ணா ராவ் தான் என்னுடைய டீச்சர். பூர்வ ஜென்மத்தில் ஏதோ நாம் ஓவியத்தில் நல்ல கலைஞராக இருந்துள்ளோம் அதிலிருந்து தான் தற்போது நமக்கு சற்று ஓவியம் வந்துள்ளது, நமக்கு ஓவியம் சுத்தமாக வராது என்று நினைத்து தான் நான் ஓவியம் வரைவதை விட்டேன் என்று வாலி ஒரு பேட்டியில் பேசிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…