நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அவர் தனது 2வது படமாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். 2வது படத்திலேயே அவர் ரஜினியை ஹீரோவாக வைத்து டைரக்ட் செய்வது பேசுபொருளாக மாறி இருக்கிறது. குருவி தலையில் பனங்காய் என்பது போல ரஜினி படத்தை அவர் வெற்றி படமாக கொடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கூறியதாவது, தலைவர் 173 படம் அறிவிப்பு வெளியான பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. ரஜினி படத்தை நான் இயக்குவதாக அறிவிப்பு வெளியான போது ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்னை தேடி வந்தன.
இந்த நிகழ்ச்சி மூலமாக நான் ரஜினி ரசிகர்களுக்கும் குடும்பத்திற்கும் கொடுக்கும் வாக்குறுதி இதுதான். தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து நீங்கள் முழு திருப்தியுடன் வெளியேறுவீர்கள். மீண்டும் சொல்கிறேன். இது என்னுடைய வாக்குறுதி என்று சிபி சக்ரவர்த்தி அந்த நிகழ்ச்சியில் உறுதியாக கூறியிருக்கிறார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…