#image_title
அட்லீ தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல இயக்குனர் ஆவார். தற்போது பயன் இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பின்னர் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
2016 ஆம் ஆண்டு விஜய் வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் வெற்றி பெற்றது. அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ 2023 ஆம் ஆண்டு சாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் தாண்டி சாதனை படைத்தது.
தற்போது அடுத்ததாக சல்மான் கான் வைத்து படம் இயக்குவதற்காக அட்லீ பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கிய தெறி திரைப்படம் வெற்றி பெற்றதால் அந்த திரைப்படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். இந்த பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அட்லீ கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் சர்மா ஆவார். அப்போது கபில் ஷர்மா அட்லியின் சினிமா வாழ்க்கை பற்றி பேசும்போது லைட்டாக உருவ கேலி செய்து பேசியிருக்கிறார்.
அதற்கு உடனடியாக அட்லீ நெத்தியடி பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியது இங்கு இங்கு உருவம் பெரிதல்ல திறமையும் நல்ல மனமும் இருந்தால் ஜெயிக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போதைய இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருவதால் அதைப் பார்த்த பாடகி சின்மயி அட்லீக்கு தனது ஆதரவை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாடகி சின்மியின் பதிவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் இந்த நிறத்தை வைத்து பேசுவதை உருவ கேலி செய்வதை நிறுத்தவே மாட்டீங்களா. நிறைய Influence இருக்கக்கூடிய பிரபல கபில் சர்மா இந்த மாதிரி பேசி இருப்பது சரியல்ல. அது மட்டுமல்லாமல் கபில் ஷர்மா இது போல் பேசுவது புதிதும் அல்ல என்று பதிவிட்டு தனது ஆதரவை அட்லீக்கு தெரிவித்திருக்கிறார் பாடகி சின்மயி.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…