தங்க மீன்கள் பட சிறுமி சாதனா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… துபாயில் இப்படி ஒரு படிப்பு படிக்கிறாங்களா… லேட்டஸ்ட் புகைப்படம்..!!

By Nanthini on ஆவணி 3, 2023

Spread the love

தமிழ் சினிமாவில்  மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்தான் தங்க மீன்கள் சாதனா. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ராமு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இவர் இயக்கிய தங்க மீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் சாதனா.

   

இந்த திரைப்படத்திற்கு இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் ராம் இயக்கிய பேரன்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

   

 

இவர் அடுத்தடுத்து படங்களில் தற்போது நடிக்காமல் துபாயில் செட்டிலாகி படிப்பு மற்றும் நடனம் என கவனம் செலுத்தி வருகின்றார். இடையில் நடனத்திலும் தன்னுடைய ஆர்வத்தை சாதனா காட்டி வருகின்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் மீடியா சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். அது கூடவே எனக்கு பிடித்த பரதநாட்டியத்தையும் விடவில்லை.

காலேஜ் முடிந்து அடுத்து போஸ்ட் கிராஜுவேட்ல ஆக்குபேஷனல் தெரபி என்ற பாடம் எடுத்து படிக்க போகிறேன். இது சிறப்பு திறன் குழந்தைகளை கையாள்வது தொடர்பான பயிற்சி. தற்போது எனது அம்மா ஒருங்கிணைந்து நடத்தும் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளேன் என்று அவர் பேசியுள்ளார்