“தோற்றாலும், ஜெயித்தாலும் ஸ்டாலின் என் ஸ்வீட் அங்கிள் தான்”… ஆனா ஊழலை விடவே மாட்டேன்….. மேடையில் கொந்தளித்த முதல்வர் விஜய்….!

Spread the love

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், “பாஜகவின் கிளைக் கழகமாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது” என்று கடுமையாகச் சாடி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மக்கள் முன் பேசிய அவர், “நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை; எப்போதும் போல உங்கள் வீட்டுப் பிள்ளையாக, மகனாக, தம்பியாக வாக்கு கேட்க வந்துள்ளேன். ஊழலற்ற ஆட்சியைத் தர விஜய்யின் ஆட்சி வரக்கூடாதா? அனைவரும் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து திமுகவின் ஊழல் குறித்தும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்தும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய விஜய், “திமுகவின் வரலாற்றை எடுத்துப் படித்தாலே அவர்களின் வண்டவாளம் தண்டவாளம் தெரியவரும்; ஊழலே செய்ய மாட்டோம் என்று திமுகவால் சொல்ல முடியுமா?” எனச் சவால் விடுத்தார். “நீங்கள் கட்டிய பாலம் என்று பெருமை பேசுகிறீர்களே, உங்கள் சொந்தப் பணத்திலா பாலம் கட்டினீர்கள்?” என்று வினவியவர், “மு.க.ஸ்டாலின் தோற்றாலும் ஜெயித்தாலும் அவர் எனக்கு ‘ஸ்வீட் அங்கிள்’ தான்” என்றும் நையாண்டி செய்தார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றித் தவறாகப் பேசியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்ற அதிமுகவின் முகமூடி இப்போது கிழிந்துவிட்டது என்றும், அதிமுக மறைமுகமாக திமுகவிற்கு உதவி வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் வரவிருக்கும் அரசியல் போட்டி என்பது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் என்று தெளிவுபடுத்திய விஜய், “யார் என்ன கூவினாலும் நமது பாதை நேர்மையான ஸ்ட்ரைட் ரூட் தான்” என்று முழங்கினார். விஜய் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது, தொட்டால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் இருவரும் இணைந்து திட்டம் போடுவதாகக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கி, ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதே தவெகவின் முதன்மை நோக்கம் என்றார். தினமும் தவெக குறித்து அசிங்கமாகப் பேசி வரும் தீய சக்திகளுக்கும், பெண்களுக்கு எதிராகப் பேசுபவர்களுக்கும் வாக்களிப்பது அவர்களை ஊக்குவிப்பதாகிவிடும் என்பதால், மக்கள் சிந்தித்துத் தவெகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago