தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளிப் பண்டிகை நாளில் சென்னை, திருவள்ளூர், தேனி, மானாமதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 9 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பண்டிகைக் காலங்களில் மதுப் புழக்கமும் வன்முறைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதை உணர்ந்து முன்கூட்டியே ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் ஆட்சியாளர்கள் தீபாவளி விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் முடங்கியதால் அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கிவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது பதிவில், சட்டம் ஒழுங்கைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நிர்வாகத் தோல்வியையே இந்தத் தொடர் கொலைகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன என்று விமர்சித்துள்ளார். பொதுமேடையில் ‘Fun, Enjoyment’ என முதல்வர் பகிரங்கமாகப் பேசுவது போதைப் பழக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கும் செயல் என்றும், இதனால் மாநிலத்தில் குற்றங்கள் குறையாது என்றும் அவர் சாடியுள்ளார். எனவே, நாட்டை முறையாக ஆட்சி நடத்தத் தெரியாமலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமலும் திணறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…