தேசிய விருதுகளில் ‘ராயன்’ திரைப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “தேங்காய் பர்பியா, தேசிய விருதா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், 2024-ல் வெளியான ஆகச்சிறந்த தமிழ் திரைப்படங்களைப் புறக்கணித்துவிட்டு ராயன் படத்தைத் தேர்ந்தெடுத்தது பெரும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நடுவர் குழுவில் டான்ஸ் மாஸ்டர் கலா இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டி, ஒரு திரைப்படத்தை முழுமையாக மதிப்பிட இயக்குநர்களோ அல்லது எடிட்டர்களோ இல்லாத சூழலில், ஒரு நடன இயக்குநரால் எப்படிச் சிறந்த திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனுஷின் அரசியல் ஆசைகள் மற்றும் பிஜேபி அரசின் பின்னணி அரசியல் லாபி ஆகியவை இந்த விருதுகளுக்குக் காரணமாக இருக்குமோ என்ற சர்ச்சையையும் அவர் தொட்டுள்ளார். 1992-ல் பாலுமகேந்திரா தனது நட்பைத் தாண்டி ‘ரோஜா’ படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்கி நேர்மையைக் காத்ததை நினைவுகூர்ந்த பாலு, இந்த முறை அதுபோன்ற நேர்மை தவறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீனாவில் வெற்றியடைந்த ‘மகாராஜா’ மற்றும் அர்ப்பணிப்புடன் நடித்த விக்ரமின் ‘தங்கலான்’ போன்ற படங்களுக்கு விருதுகள் மறுக்கப்பட்டது நியாயமற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.
சாதிய அரசியலைப் பேசிய ‘லப்பர் பந்து’, மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த ‘வாழை’, மத நல்லிணக்கத்தைச் சொன்ன ‘அயோத்தி’, உளவியலைப் பேசிய ‘வணங்கான்’ மற்றும் எதார்த்தமான ‘கொட்டுக்காளி’ போன்ற தலைசிறந்த படைப்புகள் நடுவர்களின் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஏன் என்று அவர் வினவியுள்ளார். பிற மொழிகளில் சரியான நடுவர்கள் நியமிக்கப்பட்டுத் தகுதியான படங்கள் தேர்வாயிருக்கும் நிலையில், தமிழில் மட்டும் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிய அவர், தனுஷ் சிறந்த கலைஞர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் ‘ராயன்’ அதற்குத் தகுதியான படமா என்பதே மக்களின் கேள்வி என்று தனது கருத்துகளை நிறைவு செய்துள்ளார்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…