Categories: சினிமா

என் மனைவி ஜாதகத்தை எடுத்துட்டு ரயில்ல வரும் போது அம்மா தவறி விழுந்து இறந்துட்டாங்க… உருக்கமாக பேசிய Chef வெங்கடேஷ் பட்…

Spread the love

Chef வெங்கடேஷ் பட்டை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமையல் சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். அவர் எளிமையாக சொல்லிக் கொடுத்த சமையல் மூலம் பலர் சமையல் கற்று இருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது தான் இந்த சமையல் சமையல் நிகழ்ச்சி. அந்த நேரத்தில் இவருக்கு பல ரசிகர் ரசிகைகள் இருந்தனர். குறிப்பாக இல்லத்தரசிகள் இருந்தனர். இவரது நிகழ்ச்சிக்காக இல்லத்தரசிகள் காத்திருப்பார்கள்.

பொதுவாக வந்தோமா சமையல் சொல்லிக் கொடுத்தோமா சென்றோமா என்று இல்லாமல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் எளிமையாக எப்படி ஒவ்வொரு உணவு பதார்த்தங்களின் தயார் செய்வது என்பதை பற்றிய சமையல் நுணுக்கங்களையும் கற்று கொடுத்தார் வெங்கடேஷ் பட். இதன் மூலமே அவர் புகழும் அடைந்தார். அதற்கு அடுத்ததாக வெங்கடேஷ் பட்டை மிகவும் பிரபலம் ஆக்கியது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக வந்த போதிலும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் அவர் பழகும் விதம் அனைத்தும் மக்களையும் கவர்ந்தது. எப்படி அவர் ஒரு கராரான மனிதராக இருந்தாலும் அப்படியே அவர் ஒரு ஜாலியான மனிதராகக் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது. ஆனாலும் தற்போது முடிந்த சீசனில் Production House மாறிப்போனதால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் சேர்ந்தார் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சியும் தற்போது நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் வெங்கடேஷ் பட் தனது தாயாரை பற்றி ருக்கமாக பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் 1998-ல நான் முதல்முறையா டிவி சமையல் சொல்லிக் கொடுக்க வந்த அப்போ எங்க அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நீ சாதிச்சிட்ட அப்படின்னு சொன்னாங்க. ஆனா அந்த ரெண்டாவது எபிசோடு வருவதற்குள் அம்மா இறந்துட்டாங்க.

என் மனைவி ஜாதகத்தை பார்த்துட்டு அவங்க ட்ரெயின்ல எடுத்துட்டு வரும்போது தவறி விழுந்து இறந்துட்டாங்க. ஆனா இப்போ நான் ஜெயிச்சு இந்த லெவல்ல இருக்கறத பார்த்தா அவங்க தான் முதல்ல ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அவங்க கடவுளா இருந்துதான் என்னை ஆசீர்வதிச்சுட்டு இருக்காங்க. எங்க அம்மா செலக்ட் பண்ண பொண்ணு அப்படிங்கறதனால நான் என் மனைவிய தான் கல்யாணம் பண்ணுவேன் வேற பொண்ணு பார்க்காதீர்கள் என்று சொல்லிட்டேன். இப்பவும் என் அம்மா அப்பா தான் எனக்கு தெய்வம் என்று உருக்கமாக பேசி இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

1 மணத்தியாலம் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

1 மணத்தியாலம் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

1 மணத்தியாலம் ago