விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் வெளியுலகத்திற்கு பிரபலமானவர்தான் செஃப் தாமு. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதில் இவருக்கும் பத்மஸ்ரீ விருது நேற்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் செஃப் தாமு உள்ளிட்டோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தான் செஃப் தாமு என்கின்ற தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படியான நிலையில் செப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம் உள்ளது. இந்த விருது நான் எதிர்பார்க்காத ஒன்று. இவ்வளவு பெரிய தேசிய விருது கிடைப்பது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. இது போன்ற விருதுகள் இருப்பது தற்போது சமையல் கலை பயிலும் மாணவர்களுக்கும் தெரிய வாய்ப்புள்ளது. இந்த விருதை மத்திய அரசு எனக்கு கொடுப்பதை நான் சந்தோசமாக கருதுகின்றேன். அது மட்டுமல்லாமல் இந்த விருது எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். இதனால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது.
இந்த விருதை சமையல் கலை படிக்கும் மாணவர்களுக்கும் ஹோட்டல்களில் இருக்கும் செப்களுக்கும் நான் டெடிகேட் செய்கிறேன். இந்த சமையல் துறையை நிறைய பேர் இளக்காரமா தான் பேசினாங்க. ஆதரவாக யாருமே பேசவில்லை. இந்த விருது மூலமாக செஃப் கம்யூனிட்டிக்கே ஒரு பெரிய பெயர் கிடைத்துள்ளது. இதனால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என் வீட்டைச் சுற்றி பார்த்தால் கின்னஸ் விருது உட்பட சுமார் 150 விருதுகள் இருக்கும். இவை அனைத்தையும் விட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விருது என்பது எனக்கு பெருமையை கொடுக்கிறது.
இதெல்லாம் கிடைக்குமா என ரொம்ப நாளாக நான் கனவு கண்டிருக்கிறேன். ரொம்ப கஷ்டப்பட்டேன். அதற்கான பலன் கிடைத்து விட்டது. 40 ஆண்டுகால தனது உழைப்புக்கு கிடைத்த கௌரவமாக இதை கருதுகிறேன். சமையல் தொழில் என்பது அங்கீகரிக்கப்படாமல் இருந்த நிலையில் அதை அங்கீகரித்து தற்போது விருது கிடைத்துள்ளது. மாநில அரசும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை கொடுத்தால் எங்களைப் போன்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என கோரிக்கை விடுக்கிறேன் என்று செஃப் தாமு உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…