ஆதார் கார்டில் பழைய போட்டோவை மாற்றிவிட்டு லேட்டஸ்ட் போட்டோ அப்டேட் செய்வது எப்படி? – ரொம்ப ரொம்ப ஈஸிங்க!

Spread the love

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் கார்டு வைத்திருக்கும் பலரும் தங்களது பழைய புகைப்படத்தை எடுத்துவிட்டு லேட்டஸ்ட் புகைப்படத்தை வைக்க விரும்புவார்கள். ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை புதுப்பித்துக் கொள்வது மிகவும் அவசியம்தான். அதற்கு நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் (UIDAI) செல்ல வேண்டும். முதலில் ஆதார் சேவை மையத்தில் புகைப்படம் புதுப்பிக்க ஒரு அப்பாயின்மென்ட் பதிவு செய்ய வேண்டும்.

அதற்கு UIDAI இணையத்தில் கேட்கப்படும் விவரங்களை சரியாக நிரப்பி குறிப்பிட்ட தேதியில் அப்பாயின்மென்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பாயின்மென்ட் பதிவு செய்யும்போதே அதற்கான ஆன்லைன் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு ரசீது கிடைக்கும். அந்த ரசீதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் அப்பாயின்மென்ட் எடுத்த நாளில் ஆதார் சேவை மையத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு நீங்க பெற்ற ரசீதை காட்டி டோக்கன் எண் பெற வேண்டும்.

உங்களுக்கான நேரம் வந்தவுடன் உங்கள் ஆதார் கார்டு சரிபார்க்கப்படும். கைரேகை மற்றும் கண் விழித்திரை போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படும். இது உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய செய்யப்படுகிறது. பிறகு புதிய புகைப்படம் எடுக்கப்படும். இந்த புதிய புகைப்படம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த செயல்முறை முடிந்த பிறகு சுமார் 30 நாட்களுக்குள் உங்கள் ஆதார் கார்டில் புதிய புகைப்படம் அப்டேட் செய்யப்படும். இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஆதார் புகைப்படத்தை எளிதாக லேட்டஸ்ட் புகைப்படமாக மாற்றிக் கொள்ளலாம்.

Elango

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago