இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை உரிய காலத்திற்குள் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், போலியான சான்றிதழ்கள் உருவாக்கப்படுவதைத் தடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ‘பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தச் சட்டம்) 2026’-ஐக் கொண்டு வந்துள்ளது. இப்புதிய சட்டத் திருத்தம் வரும் அக்டோபர் 1, 2026 முதல் நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம், நீண்ட காலம் தாமதமாகச் செய்யப்படும் பதிவுகளுக்கான சரிபார்ப்பு நடைமுறைகள் முன்பை விட மிகவும் கடுமையாக்கப்பட உள்ளன.
இதுவரை பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்கு மேல் தாமதமான அனைத்து விண்ணப்பங்களுக்கும் முதன்மை வகுப்பு நீதித்துறை நடுவரின் (Judicial Magistrate First Class) உத்தரவு தேவைப்பட்டு வந்தது. ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின்படி, தாமதத்தின் கால அளவைப் பொறுத்து ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகளின் நிலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வு நடந்து 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் தகவல் அளிக்கப்பட்டால் உரிய அதிகாரியின் அனுமதியோடும், தாமதக் கட்டணத்தோடும் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் (District Magistrate), வருவாய் கோட்டாட்சியர் (SDM) அல்லது ஆட்சியரால் அதிகாரமளிக்கப்பட்ட நிர்வாக நடுவர் (Executive Magistrate) ஆகியோரின் உத்தரவு பெறப்பட வேண்டும். இவர்கள் தகவல்களின் உண்மைத்தன்மையை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே அனுமதி வழங்குவர். அதேவேளையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகும் விண்ணப்பங்களுக்கு, சம்பந்தப்பட்ட பகுதிக்குட்பட்ட முதன்மை வகுப்பு நீதித்துறை நடுவரின் நீதிமன்ற உத்தரவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பள்ளி சேர்க்கை, பாஸ்போர்ட் பெறுதல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் சொத்து வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டப்பூர்வ சேவைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் முதன்மை ஆவணங்களாக விளங்குகின்றன. நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு செய்யப்படும் பதிவுகளில் போலியான தகவல்கள் இடம்பெறுவதைத் தடுத்து, அரசு ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே 1969-ஆம் ஆண்டைய மூலச் சட்டத்தின் பிரிவு 13-ல் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
இப்புதிய நடைமுறையினால், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உரிய நேரத்தில் பதிவு செய்யாத குடும்பங்கள், பின்நாட்களில் சான்றிதழ் பெற கூடுதல் ஆவணங்களையும் அதிகாரிகளின் தீவிர விசாரணையையும் எதிர்கொள்ள நேரிடும். இச்சட்டம் தாமதமான பதிவுகளை முற்றிலுமாகத் தடை செய்யவில்லை என்றாலும், தாமதம் அதிகரிக்கும் போது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்க குழந்தை பிறந்தவுடனோ அல்லது இறப்பு நிகழ்ந்தவுடனோ உள்ளாட்சி அமைப்புகளில் உரிய காலத்தில் பதிவு செய்வதே சிறந்த வழிகளாகும்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…