Categories: CINEMA

அண்ணன் தம்பி போல பழகிய ஜெமினி கணேசன் – சந்திரபாபு.. பிரிய காரணம் அந்த நடிகை தானா?

சிவாஜி கணேசனுக்கு இணையாக வைத்து போற்றப்பட்ட நடிகையர் திலகம் சாவித்ரி 50, 60களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தன்னுடன் நடித்த நடிகரான ஜெமினி கணேசனை ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆனதும் தெரிந்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசனின் மார்க்கெட்டே டல்லடித்த போதும் புகழின் உச்சியில் இருந்தார் சாவித்ரி. ஆனால் இவரின் கடைசி காலத்தில் கடனில் சிக்கி கஷ்டப்பட்டு உயிரிழந்தார். முதன்முதலில் கார் வாங்கிய ஹீரோயின், வீட்டில் நீச்சல் குளம் வைத்து கட்டிய நடிகை என்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்த சாவித்ரி படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என அகலக்கால் வைத்து கையை சுட்டுக்கொண்டார்.

சாவித்ரியின் இந்த முயற்சிகளால் அவருக்கும் அவரது காதல் கணவரான ஜெமினி கணேசனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து இருவரும் தனித்தனியே வசிக்க ஆரம்பித்தனர். அப்போது கடுமையான மன உளைச்சலில் இருந்த சாவித்ரி குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.

அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் சந்திரபாபு. அவருக்கும் அதிகமாக குடிப்பழக்கம் இருந்ததால் இருவரும் இணைந்து ஒன்றாக குடிக்க ஆரம்பித்துள்ளனர். தன்னை விட்டு அனைத்து உறவுகளும் பிரிந்து போன நிலையிலும் சந்திரபாபு மட்டும் ஆதரவாக இருப்பதால் அவர் மேல் அதிக பிரியத்தோடு இருந்துள்ளார். இருவருக்கும் இடையே அன்பை தாண்டிய ஒரு உறவு இருப்பதாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

இந்த உறவு காரணமாக திரைத்துறையில் அண்ணன் தம்பி போல நட்பாக  பழகி வந்த ஜெமினி கணேசன் –சந்திரபாபு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜெமினி கணேசன் தன்ன்னுடைய மனைவியான சாவித்ரியைப் பார்க்க அவர் வீட்டினுள் செல்வதற்கே சந்திரபாபுவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

அதீத குடிப்பழக்கம் காரணமாக சந்திரபாபு தன்னுடைய 45 ஆவது வயதிலேயே இறந்துவிட்டார். அதுபோல சாவித்ரியும் நீண்ட நாள் நோயாளியாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கோமாவுக்கு சென்று 1980 களில் உயிரிழந்தார்

vinoth

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

9 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

10 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

12 மணி நேரங்கள் ago