கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா. 65 வயதான இவர் கடந்த 21 வருடங்களுக்கு முன்பாக டாக்டரை சந்திக்க சென்ற போது அவருடைய மூன்றரை சவரன் தங்கச் செயின் தொலைந்து போனது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய வீட்டிற்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது கதீஜாவின் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். அதாவது பெயர் எதுவும் குறிப்பிடாமல் வந்த அந்த பார்சலில் மூன்றரை சவரன் தங்க செயின் இருந்தது. இது குறித்து கதீஜா கூறுகையில், “கடந்த 21 வருடங்களுக்கு பிறகு முன்பு நானும், என் மகனும் வளாஞ்சரி பகுதியில் உள்ள மருத்துவரை பார்க்க போனோம். அப்போது என்னுடைய நகையை தொலைத்துவிட்டேன். பயணம் செய்த பகுதிகளெல்லாம் தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை.
திட்டுவார்கள் என்ற பயத்தில் ஒருவாரம் கழித்து தான் என் வீட்டில் சொன்னேன். வெளிநாட்டில் பணிபுரியும் மற்றொரு மகன் அந்த செயினுக்கு பதிலாக புதிய செயினை வாங்கி கொடுத்தார். எதிர்பாராத விதமாக இப்போது அந்த செயல் வந்துள்ளது. முதலில் எங்களால் இதை நம்ப முடியவில்லை. அதன் பிறகு அந்த கடிதம் தான் எங்களை நம்ப வைத்தது. அந்த கடிதத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடமிருந்து தொலைந்து போன ஒரு நகை எனக்கு கிடைத்தது. அது என் வாழ்க்கை சூழ்நிலையாக பயன்படுத்திக் கொண்டேன். இன்று நான் அதை நினைத்து வருந்துகிறேன். அதனால் இந்த கடிதத்தோடு அது போன்ற ஒரு தங்கச் செயினை வைத்துள்ளேன். நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் உட்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்ததாக்க கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…
தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…