அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி . மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த அகவிலைப்படி வரப்போகிறதாம். தற்போது வரும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருந்த அகவிலைப்படி உயர்வு வரப்போகிறது .
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வு ஊதியத்தை உயர்த்துவதாக அறிவிப்பும் வந்துள்ளன. ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவலைப்படி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகைகுள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 மாத அகவிலைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது . இது ஒரு நிலையான சூத்திரம் மற்றும் விகிதத்தின் படியாக கணக்கிடப்படுமாம் . இந்த முறை வரும் அகவிலைப்படி 3% அதிகரித்து இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது . மொத்த அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயருமாம்.
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு அகவிலைப்படி 53 லிருந்து 55 ஆக மாறியிருந்தது. 2025 ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீடு 145 ஆக இருந்தது . 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2025 ஜூன் மாதம் வரையிலான 12 மாத குறியீடு 143.6 ஆகும். எனவே இந்த முறை அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கும் என்றும் வருகின்ற தீபாவளியை ஒட்டி அகவிலைப்படி வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தீபாவளி பரிசுகள் ஏற்கனவே அறிவித்தது போல வரும் என்றும், அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்களுடைய சம்பளத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு உயர்வும், அகவிலைபடி உயர்வும், பயணப்படி மற்றும் வீட்டு வாடகை படியும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. எப்பொழுது அகவிலைப்படி வரும் என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…
உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…
தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் "வருகையில்லா ஆவணப்பதிவு" எனும்…