காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று தான் நிம்சுலைட். இதனை அதிக அளவில் பயன்படுத்தும் போது அது கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த மருந்துக்கு தடைவிதித்துள்ளது. அதன்படி 100 மில்லி கிராம் அளவுக்கு கூடுதலாக உள்ள மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை செய்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை தடை செய்வது பொது நலனுக்கு அவசியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இருந்தாலும் 100 மில்லி கிராமுக்கு குறைவான மருந்து பயன்பாட்டுக்கு தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு முதல் முறையாக 1995ஆம் ஆண்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் வழங்கியிருந்தது. ஏறத்தாறு ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்த மருந்து மக்களைச் சென்றடையும் நிலையில் தற்போது மத்திய அரசின் இந்த தடை உத்தரவு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…