கள்ளக்காதல் விவகாரம்?… காட்டிகொடுத்த நீல நிற டிரம்… மீரட் கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற சௌரப் ராஜ்புத் கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வணிகக் கடற்படை அதிகாரியான சௌரப் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகியோரால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவர்களது தகாத உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், இருவருமாகச் சேர்ந்து சௌரப்பை தீர்த்துக்கட்ட முன்கூட்டியே திட்டமிட்டு இச்செயலை அரங்கேற்றினர்.

கொலை செய்த பின் உடலை மறைப்பதற்காக, சௌரப்பின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைத்து, அதன் மீது சிமெண்ட் கலவையைப் பூசி மறைக்க முயன்றனர். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொடூரக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் ஆதாரங்களும் உறுதி செய்யப்பட்டன. இதனையடுத்து, இது மிக அரிதான மற்றும் கொடூரமான குற்றம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கணவரைக் கொன்ற மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Gayathri

Recent Posts

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

15 minutes ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

23 minutes ago

“உடனடி விசாரணை வேண்டும்!”… சிறுமி மரணத்தில் களமிறங்கிய பீம் சேனா… ஆதாரங்கள் அழிக்கப்படுகிறதா… கிளம்பும் புது சர்ச்சை…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

36 minutes ago

ஐயோ சந்நிதியிலேயே இப்படியா?… கேமராவில் சிக்கிய அசிங்கம்… புனித தலத்தில் இவ்வளவு துணிச்சலா… பக்தர்கள் கொந்தளிப்பு…!!

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா மலைக் கோயில் வளாகத்தில், பெண் பக்தர்களிடம் சிலர் தகாத முறையில்…

46 minutes ago

மின்னல் வேகத்தில் வந்த கார்…! நடைபாதையில் ஓய்வு எடுத்த தாய், மகன் துடிதுடித்து பலி… தம்பதியினர் படுகாயம்… கோர விபத்து…!!

குஜராத் மாநிலத்தில் சாலையோர நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதியதில், தாயும்…

51 minutes ago