Categories: CINEMA

ஐபிஎல் பைனலை பார்க்க அஹமதாபாத் ஸ்டேடியத்தில் ஒன்று திரண்ட திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்…

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது.இதில் பத்து அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்தது.

அதன் முடிவில் முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளான குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் செயின்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றும் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையும் கலந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைக்கும் முனைப்பில் களத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தன.

இந்த போட்டியை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்தே சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் தினம் தோறும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ஆனால் எதிர்பாராத விதமாக தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு 11 மணி வரை மழை நீடித்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு தொடங்கிய இந்த போட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது.

 

இதன் மூலமாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்று உள்ளது. இந்த இறுதி போட்டியை தமிழ் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் ஸ்டேடியத்தில் கண்டு கழித்தனர்.

அதாவது நடிகை வரலட்சுமி சரத்குமார், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், காமெடி நடிகர் சதீஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியின் மனைவி சாக்ஷி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

4 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

5 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

6 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

6 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

8 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

8 hours ago