“இனி ஒரு சொட்டு நீர் கூட கிடையாது”…. மீண்டும் தமிழகத்திற்கு ஷாக் கொடுத்த கர்நாடகா… அமைச்சரின் பேச்சால் தமிழகத்தில் வெடித்த புதிய சர்ச்சை…!

Spread the love

தமிழகத்தைப் பொறுத்தவரை 28 மாவட்டங்களின் வாழ்வாதாரமும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 50 விழுக்காடும் காவிரி நீரை நம்பியே இருக்கின்றன. இத்தகைய சூழலில், தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா அறிவித்திருப்பது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தங்கள் மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை வலுவிழந்ததால் போதிய மழை இல்லை என்றும், தன்னிச்சையாகத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மழுப்பியுள்ளார். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், மேகதாது அணைத் திட்டம் வறட்சி காலங்களில் இரு மாநிலங்களுக்கும் பயன்படும் என்றும், பெங்களூரின் குடிநீர் மற்றும் கர்நாடக விவசாயிகளின் நலனைக் கருதியே தாங்கள் செயல்படுவதாகவும் கூறி, அணை கட்டும் முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சுக்குத் தமிழக விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கொந்தளிப்பும் உருவாகியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி ஜூன் மாதத்திற்கு 9.91 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சி எனத் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் தண்ணீர் திறக்கிறோம் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் தண்ணீர் தர முடியாது என முரண்பாடாகப் பேசும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து” நாடகமாடுகிறார் என்று விவசாயிகள் சாடியுள்ளனர். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் கர்நாடகா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது, இரு மாநிலங்களுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

“வாள்களை வீசி அலறவிட்ட ஆசாமிகள்…” நவரத்திரி விழாவில் திடீர் பயங்கரம்! 3 பேர் அதிரடி கைது… இணையத்தை அதிர வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் அருகேயுள்ள வரப் பகுதியில் நடைபெற்று வந்த நவரத்திரி கார்பா நடன நிகழ்ச்சியில், கத்திகளுடன் புகுந்த கும்பல்…

1 minute ago

மனசாட்சியே இல்லையா…? முதியவரை எட்டி உதைத்து கொடூரமாக தாக்கிய நபர்… இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

வங்கதேசத்தில் காவல்துறையினர் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பொதுமக்கள் மத்தியில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துத் துவைக்கப்படும் பதைபதைக்கும்…

11 minutes ago

முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு செக்…! இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை…? தவெக தலைமையின் திடீர் முடிவு…!!

அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த தலைவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மீண்டும்…

27 minutes ago

“எனக்குத்தான் பதவியே இல்லையே…” முதல்வர் விஜய் குறித்து சரத்குமார் அளித்த பகீர் பேட்டி… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

தமிழக பாஜகவில் இணைந்த பிறகு தமக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து, "எனக்குத்தான் பாஜகவில் எந்தக் கட்சிப் பதவியும் இல்லையே"…

37 minutes ago

திக்.. திக்..! இவளா ஒரு தாயா?… பயங்கர அலறல் சத்தம்… பூட்டிய கதவு… தாய் செய்த வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கெர்லி பகுதிக்கு உட்பட்ட டான்டியா கிராமத்தில், 28 வயது தாய் ஒருவர் தனது மூன்று…

40 minutes ago

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு செக்… முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய விவகாரம்… அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்….!!

முதல்வர் விஜய்யைத் தரக்குறைவாகப் பேசிய வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குக் காவல்துறை முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த…

48 minutes ago