நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி மீது தேனி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகத் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் லெப்ட் பாண்டி, சமீபத்தில் வெளியிட்ட காணொலி ஒன்றில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரை மிகவும் ஆபாசமாகப் பேசியதோடு, அவர்களுக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயகுமார் அளித்த புகாரின் பேரில், தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் லெப்ட் பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே நிலவி வரும் மோதல் போக்கு, இந்த சட்ட நடவடிக்கையினால் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…