ஐயோ என்ன கொடுமை சார் இது… மருத்துவமனையா இல்ல பேக்கிங் கடையா?… உடைந்த காலுக்‌குக் கட்டுப் போட அட்டைப்பெட்டி… இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!

Spread the love

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், சாலை விபத்தில் காயமடைந்து உடைந்த காலுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைக்கான பிளாஸ்டர் வசதிகள் உடனடியாகக் கிடைக்காததால், நோயாளியின் காலை நிலைநிறுத்த மருத்துவர்கள் இந்த தற்காலிக வழியைக் கையாண்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய நோயாளி தீவிரமான எலும்பு முறிவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, உடனடியாக அவரது கால அசைவைத் தடுத்து மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே அட்டைப்பெட்டி வைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் தற்காலிகமாக பிளாஸ்டர் போடும் பொருட்கள் தட்டுப்பாடாக இருந்ததா அல்லது அவசர கால நடவடிக்கையாக இது செய்யப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பீகாரின் சுகாதாரத் துறை அமைப்பின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய அவசரகால மருத்துவ உபகரணங்களும், சரியான சிகிச்சை வசதிகளும் உடனடியாகக் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சம்பந்தப்பட்ட நோயாளிக்கு உரிய எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Swetha

Recent Posts

“கடல் பார்த்த ஆபீஸ் யோகமா?”…. ரூ.1,200 கோடி திட்டத்திற்குப் பின் இருக்கும் ஜோதிடக் காரணம்…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்….!

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…

8 minutes ago

பீகாரை அலறவிட்ட சம்பவம்… சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… என்கவுண்டரில் தூக்கிய அதிரடி போலீஸ்….!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…

17 minutes ago

அடேய் என்னடா பண்றீங்க…. ஒரே பைக்கில் 4 பேர்… தோள் மீது உட்கார்ந்து நடுரோட்டில் ஆபத்தான சாகசம்….. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…

24 minutes ago

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

29 minutes ago

“ஏ அள்ளு அள்ளு… ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது”…. நெடுஞ்சாலையில் பாய்ந்த பால் ஆறு…. ஓடோடி வந்து குடங்களில் அள்ளிய மக்கள்…. வைரலாகும் வீடியோ…!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…

38 minutes ago

25 நாளா ஏன் அமைதி?… “வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்?”…. ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி….!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…

42 minutes ago