குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில், அண்டை வீட்டுக்காரரின் காரில் இருந்து தொடர்ந்து ஒலித்த சென்சார் அலாரத்தால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், காருக்குத் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞரான புஷ்பா பட் என்பவருக்குச் சொந்தமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் அருகே ஆட்கள் சென்றாலோ அல்லது தொட்டாலோ எச்சரிக்கை ஒலி எழுந்து அப்பகுதி மக்களைத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அலார சத்தத்தால் கடும் கோபமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷிகர் ஜெயேஷ் கோஹெல் என்பவர், பாட்டிலில் எரிபொருளை எடுத்து வந்து காரின் முன்பகுதி மற்றும் கண்ணாடியின் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். மளமளவெனப் பரவிய தீயினால் காரின் முன்பகுதியும் உள்பகுதியும் பலத்த சேதமடைந்தன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றபோதிலும், சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் பேரில் மோர்பி ஏ-பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், அந்த நபர் காரின் மீது திரவத்தை ஊற்றி தீப்பற்ற வைப்பது பதிவாகியுள்ளது. காரின் சென்சார் சத்தத்தால் ஏற்பட்ட அதிருப்தியே இச்செயலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல கேதர்தால் மலையேற்றப் பாதையில் பயணம் மேற்கொண்ட ஏழு மலையேறுபவர்கள் மற்றும் ஒரு…
துருக்கியின் நெவ்செஹிர் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த பெண்ணை, நபர் ஒருவர் திடீரென முகத்தில் அறைந்து…
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சரைகேலா-கர்சாவான் மாவட்டத்தில், குடும்பத் தகராறு குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, காவலர்…
அவளது வீட்டின் வாயிலில் வண்டி நின்றபோதும் அவனது குரலில் விடாப்பிடியான பிடிவாதம் குறையவில்லை. பணி முடிந்து களைத்திருந்த அந்த இரவில்,…
சூரத்தின் அத்வா மற்றும் அத்வாலைன்ஸ் எல்லைப் பகுதிக்குட்பட்ட நான்புரா மட்டன் மார்க்கெட் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முகமது…
புளோரிடாவில் நடந்த கோரமான லியர்ஜெட் விமான விபத்தில், அதில் பயணித்த ஒன்பது பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு…