Categories: சினிமா

ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த்… வாய்ப்பு இல்லாத இடத்தில் திறமையை நிரூபித்த கேப்டன்…

Spread the love

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான புகழ்பெற்ற நடிகர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட விஜயகாந்த் மதுரையிலிருந்து படிப்பில் கவனம் செலுத்தாமல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார். ஆனால் இவரின் கருமை நிறம் மற்றும் தோற்றத்தினால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் பல நிராகரிப்புகளை சந்தித்தார் விஜயகாந்த். அதற்கு பிறகு தான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தானது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு பிரபலமான விஜயகாந்த் உடன் அவருடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கிய நடிகைகள் போட்டி போட்டு நடிக்க ஆரம்பித்தனர்.

சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், இனிக்கும் இளமை, அகல் விளக்கு போன்ற படங்களில் நடித்தார். பிறகு இவரது நண்பர் ராவுத்தருடன் இணைந்தார் விஜயகாந்த். ராவுத்தர் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் விஜயகாந்த். இவர் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனஸ்ட்ராஜ் கேப்டன் பிரபாகரன் போன்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். அதை தொடர்ந்து தான் இவரை கேப்டன் விஜயகாந்த் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியை ஏற்று நடத்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார் விஜயகாந்த்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் தனது திறமையை நிரூபித்தார். அதாவது விஜயகாந்த் ஒரே ஒரு வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் கேப்டன் விஜயகாந்த் 1984 இல் 18 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்கள் என்னென்ன என்றால் 1. மதுரை சூரன் 2. மெட்ராஸ் வாத்தியார் 3. தீர்ப்பு என் கையில் 4. வெற்றி 5. நூறாவது நாள் 6. வேங்கையின் மனிதன் 7. குழந்தை இயேசு 8. வெள்ளை புறா ஒன்று 9. நல்ல நாள் 10. மாமன் மச்சான் 11. வீட்டுக்கு ஒரு கண்ணகி 12. சபாஷ் 13. நாளை உனது நாள் 14. சத்யம் நீயே 15. இது எங்க பூமி 16. வைதேகி காத்திருந்தாள் 17. குடும்பம் 18. ஜனவரி 1 ஆகியவை ஆகும்.

admin

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

31 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

40 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

52 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

54 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

57 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

1 மணத்தியாலம் ago