Categories: CINEMA

உன்னை வளர்த்துவிட்ட என்கிட்டயே உன் வேலையை காட்றியா? – தனுஷ், சிவகார்த்திகேயன் மோதலுக்கு இதுதான் காரணமா?

நடிகர் சிவகார்த்திகேயன், துவக்கத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தார். அதன்பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற சில படங்களால், மளமள என முன்னுக்கு வந்தார்.

எஸ்கே புரடக்சன்ஸ் என்ற சொந்த தயாரிப்பிலும், தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் பினாமி பெயரிலும் படங்களை தயாரித்தார். இதில் ரூ. 25 கோடி வரை இப்போது சிவகார்த்திகேயன் கடனாளியாக இருக்கிறார். இதற்கிடையே, இசையமைப்பாளர் இமான் அளித்த நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயன், ஒரு நம்பிக்கை துரோகி என்று கூறியது இன்னும் பரபரப்பை, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது வரும் பொங்கலுக்கு அயலான் படம் ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 25 கோடி கடன்களை திருப்பி தந்தால்தான், இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நெருக்கடியில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அதேவேளையில், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம், வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது. அயலான் படத்தின் வசூலை சிக்கலாக்கவே, தனுஷ் கொடுத்த பிரஷ்ஷரால், இன்னும் சில மாதங்கள் கழித்து ரிலீஸ் ஆக வேண்டிய கேப்டன் மில்லர் படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அந்த படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு, தனுஷ் துணை நின்று நிறைய உதவிகள் செய்தார். எதிர்நீச்சல் படத்தில் தனுஷ்- நயன்தாரா சிறப்பு பாடல் காட்சி இடம்பெற்றது. 3 படத்தில், தன்னுடன் சக பள்ளி மாணவனாக, சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். ஆனால் நடிகரான பின்பு தனுஷின் ஆடியன்ஸ்சை முழுக்க தன்பக்கம் திருப்பி விட்டார் சிவகார்த்திகேயன்.

குடும்பம், குழந்தைகள் என பலரும் சிவகார்த்திகேயன் பக்கம் போனதால், மனம் வெறுத்த தனுஷ், அன்று முதல் சிவகார்த்திகேயனை தன் தொழில் ரீதியான எதிரியாக பார்க்க துவங்கினார். அதன் விளைவாக இப்போது, வரும் பொங்கலுக்கு அயலானுக்க ஆப்பு வைக்க, தனுஷ் தனது கேப்டன் மில்லரை களத்தில் இறக்குகிறார். இதில் யார் பக்கம் ரசிகர்கள் இருக்க போகிறார்கள் என்பதை அந்த படங்களின் வெற்றி முடிவு செய்யும்.

Sumathi
Sumathi

Recent Posts

முதல்ல நயன்தாரா இல்லைன்னு சொன்னாங்க இப்ப த்ரிஷாவும் இல்லையா..? அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்ஜே பாலாஜி..!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…

23 நிமிடங்கள் ago

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

25 நிமிடங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

43 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

2 மணி நேரங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

3 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago