செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும். சுயலாபத்துக்காக தங்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் எப்படி வாக்கு கேட்க வரலாம் எனக் கூறி, அவர் செல்லும் கிராமங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை மறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தண்டராயப்பேட்டையில் பரப்புரை மேற்கொண்டபோது, பொதுமக்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. இதைப் பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்களின் கைபேசிகளைப் பறித்த தவெக நிர்வாகிகள், “வெற்றி பெற்ற பின்பு உங்களைக் கவனித்துக் கொள்கிறோம்” என்றும், “நினைத்தால் தேர்தலையே நிறுத்துவோம்” என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மோதலின்போது, பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் பார்வையாளர்களாக நின்றது மக்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பரப்புரை மேற்கொண்ட இடங்களிலும், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதேபோன்ற சூழல் தாராபுரம் தொகுதியிலும் நிலவுகிறது; அங்கு தவெக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சத்தியபாமாவுக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர் தனது பரப்புரையைச் சரிவர மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்தத் தொடர் அதிருப்தியின் காரணமாக, தவெகவைச் சேர்ந்த இந்த இரு வேட்பாளர்களுக்கும் தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…