மேட்ரிமோனியில் வீசிய தூண்டில்… 2வது கணவருக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த 32 வயது பெண்…. கோவையில் அதிர்ச்சி….!

Spread the love

கோவை மேட்ரிமோனி தளங்கள் மூலம் மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைப் பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவையின் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான தொழிலதிபர் பெண் ஒருவர், தனது கணவர் மறைவுக்குப் பின் மறுமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (45) என்பவர் அப்பெண்ணைத் தொடர்பு கொண்டு, தானும் தனிமையில் இருப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாகவும் கூறி நெருக்கமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த சிறிய தொகையைக் கடனாகப் பெற்று உடனடியாகத் திருப்பிக் கொடுத்த ராம்குமார், பின்பு குடும்பத்தினரைச் சந்தித்துத் திருமணம் உறுதி செய்தார். அதன் தொடர்ச்சியாகத் தொழில் அவசரத் தேவை எனக் கூறி அப்பெண்ணிடமிருந்து ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ராம்குமாரின் பிறந்தநாளுக்கு 2 பவுன் தங்கச் சங்கிலியை அப்பெண் பரிசளித்த நிலையில், டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொள்வதாக ராம்குமார் வாக்குறுதி அளித்தார். பின்னர் தொழிலில் நஷ்டம் எனக் கூறி மேலும் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்ட ராம்குமார், திடீரென அப்பெண்ணைத் தொடர்புகொள்வதைத் தவிர்த்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்த ராம்குமார், அவரைப் பலவந்தமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ரூ.1 கோடி கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண் விசாரணையில் இறங்கியபோது, ராம்குமாருக்கு ஏற்கனவே வைதேகி என்ற பெண்ணுடன் திருமணமாகியிருப்பதும், சென்னையைச் சேர்ந்த கணவனை இழந்த மற்றொரு பெண்ணையும் இதேபோன்று ஏமாற்றி நகைப் பணத்தைப் பறித்து பலாத்காரம் செய்ததும் அம்பலமானது. இதுகுறித்துத் திருப்பூரில் உள்ள ராம்குமாரின் குடோனுக்குச் சென்று பணத்தைக் கேட்டபோது, ராம்குமார், அவரது மனைவி வைதேகி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து அப்பெண்ணிற்கு விபரீத மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ராம்குமார் பல பெண்களைத் திருமணம் ஆசை காட்டி ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராம்குமார், அவரது மனைவி வைதேகி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர், ராம்குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

சென்னையில் அதிர்ச்சி…. டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென உருண்ட சொகுசு கார்…. வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…

7 minutes ago

“ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்”..! டிக்கெட் இல்லாம போலாமா?… கைதியோடு ஏறிய போலீஸ்… இறக்கிவிட்ட RPF… நடுவழியில் நடந்த பகீர் வாக்குவாதம்…!!

கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்த ராஜஸ்தான் மாநிலக் காவலர்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கும் இடையே முறையான பயண…

10 minutes ago

நடுவானில் உறைந்துபோன நிமிடங்கள்…. “நான் சாக விரும்பல” கதறிய பைலட்…. 45 நிமிடம் போராடி உயிர் மீட்ட ஜார்ஜிய டாக்டர்….!

ஃபிளை துபாய் விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட விபத்து அல்லது உடல்நலக்குறைவால் கடுமையாகக் காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை,…

12 minutes ago

நொடியில் தலைகீழான பயணம்… காரை அடித்து நொறுக்க முயன்ற கொடூரன்… நடுங்கி கதறிய சிறுமி… சீறிய தாய்… சாலையில் நடந்த பயங்கரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனது சிறுமி மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண், நடுவழியில் எதிர்பாராத…

20 minutes ago

பிரியாணி காதலால் கைவரிசை… ஆயுள் தண்டனை கைதி அபிராமிக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்…. சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…..!

குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

28 minutes ago

தலை இல்லையா?… உண்மையில் நடந்தது இதுதானா?… காட்டுப் பகுதியில் கிடந்த இளம் பெண் சடலம்… விபத்தில் உயிரிழந்த காதலன்… தீவிர விசாரணை போலீஸ்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை…

29 minutes ago