பெங்களூரில் 42 வயதான ஒரு பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான இந்த பெண் சென்னை சேர்ந்த பிரபல தொழிலதிபரான சந்தோஷ் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சந்தோஷ் ரெட்டியின் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்கு ஆடைகளை வடிவமைத்து கொடுக்குமாறு அவரது மகள் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அந்த பெண் மூலம் அவரது தந்தையான சந்தோஷ் ரெட்டியின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக பழகினோம்.
அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து தருமாறு என்னிடம் கூறினார். ஒருநாள் சந்தோஷ் ரெட்டி எனது வீட்டிற்கு வந்து எனது மகள் என்னிடம் பேசுவதில்லை. நீங்கள் தலையிட்டு மகளை என்னுடன் பேச வைக்க வேண்டும் என கூறியதால் நான் அவரை சமாதானப்படுத்தினேன். இதேபோல மற்றொரு நாள் சந்தோஷ ரெட்டி எனது வீட்டிற்கு வந்து என்னை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்தார். நான் மறுப்பு தெரிவித்த போது என்னை அடித்து தாக்கினார். எனது குழந்தைகளை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
