4G, UPI வசதி கொண்ட Keypad போன் அதுவும் 950 ரூபாயில்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

என்னதான் விதவிதமான ஸ்மார்ட் ஃபோன்கள் மாடல்கள் வந்தாலும் கூட கீபோர்டு போன்களை பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு அட்டகாசமான ஆஃபரில் ஒரு போனை உங்களால் வாங்க இயலும் அதுவும் ஆயிரம் ரூபாய்க்கு கீழே. அது என்ன போன் அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

நோக்கியா போன் பிராண்ட் இன் கீழே மொபைல் போனை தயாரிக்கும் உரிமையைப் பெற்ற HMDகுளோபல் நிறுவனமானது தனது சொந்த பிராட்டின் கீழ் பலவிதமான மொபைல் ஃபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது HMD 105 4 ஜி மற்றும் HMD 110 4ஜி ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட்டு இருக்கிறது. யூடுபே, youtube மியூசிக் மற்றும் ஷார்ட்ஸ் போன்றவற்றின் ஆதரவுடன் வருகிறது.

இந்த போனின் ரீலோடு செய்யப்பட்ட ஆப் மூலம் UPI பரிவர்த்தனைகளையும் செய்யலாம். UPI மூலம் பணம் அனுப்ப மற்றும் பெறவும் உங்களால் முடியும். கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு உங்களால் பணம் அனுப்பவும் முடியும்.

இந்த HMD 105 4ஜி மற்றும் HMD 110 4g ஆகிய இரண்டு மொபைல் ஃபோன்களும் 1450 mAh பேட்டரியை கொண்டிருக்கிறது. youtube UPI பரிவர்த்தனைகள் mp3 பிளேயர் வயர்லெஸ் FM ரேடியோ போன் டிராக்கர் மற்றும் எஸ்டி கார்டு வழியாக 32gb வரையிலான ஸ்டோரேஜ் போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

தற்போது இந்த இரண்டு போன்களையும் அமேசான் வழியாக வாங்கும் பொழுது உங்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. HMD 110 4g மாடலானது 2799 ரூபாய்க்கு பதிலாக தள்ளுபடி செய்து 2299 ரூபாயில் கிடைக்கிறது மற்றும் HMD 105 4ஜி மாடலானது 1499 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. தற்போது தள்ளுபடி விலையில் இந்த போன் 949 ரூபாயில் கிடைக்கிறது. நீங்கள் கீபேட் போன் வாங்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வாய்ப்பை மிஸ் செய்து விடாதீர்கள்.

admin

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

2 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

2 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

2 மணத்தியாலங்கள் ago