ஷாக்… கனிமவளக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட… வழக்கறிஞர் மீது கொடூரத் தாக்குதல்… சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… அரசின் மௌனத்தைக் கிழித்தெறிந்த நாதக சீமான்…!!

Spread the love

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான வேலாயுதம் என்பவர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும் கனிமவளக் கொள்ளையையும் துணிவுடன் வெளிக்கொணர்ந்து போராடி வந்த வேலாயுதம், இத்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் மண்ணுரிமைப் போராளிகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் இத்தகைய கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி வேடிக்கைப் பார்க்கும் அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்துள்ள சீமான், இது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் எனக் விமர்சித்துள்ளார். மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை மற்றும் ஊழல்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, வேலாயுதம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் இனி நிகழாமல் தடுக்கவும், சமூக நலனுக்காகப் போராடும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு “சமூக ஆர்வலர்கள் பாதுகாப்புத் தனிச்சட்டம்” நிறைவேற்ற வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Swetha

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

2 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

2 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

2 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

2 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

2 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

2 மணத்தியாலங்கள் ago