ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அமைந்துள்ள செக்டர் 20 சம்ஸ்கிருதி மாடல் பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு பயிலும் 6 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், பள்ளி வளாகத்திற்குள்ளேயே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதே பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுவன் ஒருவனே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின் போது, அச்சிறுமியை நோக்கி செங்கற்கள் மற்றும் பூந்தொட்டிகளை எறிந்து சிறுவன் பலமுறை கடுமையாகத் தாக்கியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவரது நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேல் சிகிச்சைக்காகச் சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
https://twitter.com/Delhiite_/status/2116389776781979773/video/1
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பு நேரத்தில் இத்தகைய கொடூர சம்பவம் நடந்துள்ளது பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளி ஊழியர்களின் மேற்பார்வைக் குறைபாடு மற்றும் வளாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு தீவிரக் கேள்விகளையும் கவலைகளையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
பீகார் மாநிலம் ஆரா பகுதியில், காதலித்துத் தம்பதியான கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடு ஒரு கொடூர வன்முறையாக மாறியுள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த…
கர்நாடக மாநிலத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நபரால் மனமுடைந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மாணவி விஷம்…
வழக்கமாகக் காவல்துறையைக் கண்டாலே வாகன ஓட்டிகள் அஞ்சி நடுங்குவதும், சந்துகளுக்குள் வண்டியைத் திருப்புவதும் தான் அன்றாடக் காட்சி. ஆனால் இங்கே,…
ரோப்டா தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மல்லேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அறுவை சிகிச்சை…
சாலையில் அசுர வேகமும் அபாயகரமான சாகசங்களும் மட்டுமே துணிச்சலின் அடையாளம் என நினைக்கும் விபரீத வேட்கை, சில நொடிகளில் வாழ்க்கையின்…